Skip to main content

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத யோகி! - ஆதரவு அமைச்சர் குற்றச்சாட்டு

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

கூட்டணி தர்மத்தை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடைபிடிக்கத் தவறியதாக ஆதரவு தரும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Yogi

 

உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இந்தக் கட்சியின் தலைவரும், வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களில் ஒருவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சராக உள்ளார். 

 

எம்.எல்.ஏ.வாக போட்டியிடாத ஒருவரை முதல்வராக்காமல், எம்.பி.யான யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியதில் இருந்தே ராஜ்பர் அதிருப்தியில் இருந்தார். அதேபோல், யோகியுடன் தொடர்ந்து கருத்து வேறுபாட்டுடன் இருந்த ராஜ்பர், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும், தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

 

rajbhar

 

இந்நிலையில், உபியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்பர்,

 

‘எஸ்.இ/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த 2 தலித் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். மற்றொரு தலித் எம்.பி. முதல்வர் யோகியைக் கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல, பலரும் யோகியின் மீது கோபத்தில் உள்ளனர். 

 

அமைச்சரவைக் கூட்டத்தில் அனைவரின் கருத்துகளும் கேட்கப்பட்டாலும், ஒரு சிலர்தான் இறுதி முடிவை எடுக்கின்றனர். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து புகார் செய்துள்ளேன். இதுகுறித்து நாளை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டவில்லை என்றால், கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்