Skip to main content

பெண்கள் எப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும்! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. அடடே அறிவுரை

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் குழந்தைகளையே பெண்கள் பெற்றெடுக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 

shakya

 

 

 

சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்னாலால் சாக்யா. இவர் மத்தியப்பிரதேசம் மாநிலம் குனா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். எதிர்க்கட்சிகளை காரசாரமாக விமர்சித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் குறித்து பேசினார். அப்போது, ‘காங்கிரஸ் கட்சியினர் வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால், ஏழைகளையே ஒழித்துக்கட்டி விட்டார்கள். அவர்களைப் போன்றவர்களையும் சில பெண்கள் பெற்றெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், பெண்கள் நம் கலாச்சாரத்தைக் காக்கும், சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இல்லையேல், கருத்தரிக்காமலே இருந்துவிடலாம்’ என பேசிமுடித்தார்.
 

பன்னாலால் சாக்யா இதுபோன்ற பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு, அதன்மூலம் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்தபோது, விராட் கோலியின் தேசப்பற்றை விமர்சித்தார். அதேபோல், பெண்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்த பாய் ஃப்ரெண்ட் கலாச்சாரத்தை விரட்டியடிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். 

 

சார்ந்த செய்திகள்