Skip to main content

திருவண்ணாமலை தொகுதியும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

TIRUVANNAMALAI DISTRICT ADMK CANDIDATES ADN PMK CANDIDATES LIST

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க 5 சட்டமன்றத்  தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 3 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ம.க. 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 1 சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறது. 

 

அ.தி.மு.க. போட்டியிடும் 5 தொகுதிகளும், வேட்பாளர்களும்:


செங்கம் (தனி)- முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக இருந்தவர் நைனாக்கண்ணு. தற்போது கட்சியில் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார்.

 

கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம். தற்போது இவர் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சியின் பேரவையில் நிர்வாகியாக உள்ளார்.

 

போளுர்-அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, இவர் கட்சியில் மாநில விவசாய அணிச் செயலாளராகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கடந்த காலத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்து சர்ச்சையில் பதவியை இழந்து சிறைச்சென்றவர்.

 

ஆரணி- சேவூர்.ராமச்சந்திரன், இவர் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராக உள்ளார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். செய்யாறு- தூசி.மோகன் - வடக்கு மாவட்டச் செயலாளராகவும், செய்யார் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.

 

TIRUVANNAMALAI DISTRICT ADMK CANDIDATES ADN PMK CANDIDATES LIST

 

பா.ம.க. போட்டியிடும் 2 தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும்:

 

வந்தவாசி (தனி)- வடிவேல் ராவணன். இவர் பா.ம.க.வின் பொதுச்செயலாளராகவுள்ளார். இவர் வேறு மாவட்டத்தில் இருந்து இந்த தொகுதியில் கொண்டு வந்து நிறுத்துகிறது பா.ம.க. தலைமை.

 

கீழ்பென்னாத்தூர்- செல்வகுமார். இவர் கட்சியின் அமைப்பாளர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை இங்கு நிறுத்துகிறது பா.ம.க. தலைமை. இவரின் மனைவி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மீதமுள்ள 1 தொகுதி பா.ஜ.க. போட்டியிடும் தொகுதி. இதன் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்