தூத்துக்குடி அதிமுகவுக்குள் வெடித்துக் கொண்டிருக்கும் அதிருப்திகள், அதிமுகவை பிளவுப் படுத்திக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். தூத்துக்குடி தெற்கு மா.செ.வாக இருக்கிறார் சண்முகநாதன். இவருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லப் பாண்டியனுக்கும் மாவட்டத்தில் ஏழாம் பொறுத்தம். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாசரேத், ஆத்தூர், உடன்குடி பேரூராட்சிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்கள் நியமனங்களின் பின்னணியில் பல லகரங்கள் விளையாடியிருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
மேலும், அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் மீதும் விரும்பத்தகாத பல்வேறு புகார்கள் இருப்பதாகவும் அதிமுக தலைமையகத்துக்கு பறந்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் நடந்துள்ள நியமனங்களில் உள்ள ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்களை சந்திக்க அதிருப்தியாளர்கள் முடிவு செய்திருந்தனர். இதனையறிந்த அதிமுக மேலிடம், அதிர்ப்தியாளர்களை சமாதானப்படுத்தியிருப்பதால் தற்காலிகமாக பத்திரிகையாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.