Skip to main content

அமைச்சர்களைப் பற்றி தீவிரமாக விசாரிக்கும் எடப்பாடி பழனிசாமி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அப்செட்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

admk


தமிழக அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களிலும் செய்துவரும் கரோனா நிவாரண உதவிகள் பற்றி ஸ்பெஷல் டீம் போட்டுத் தீவிரமாக விசாரித்து வருகிறார் எடப்பாடி. இதையறிந்த சீனியர் அமைச்சர்கள் சிலர், முதலில் எடப்பாடி தனது சேலம் மாவட்டத்திலும், தனது ஊரான எடப்பாடியிலும் என்ன நடக்குது என்று தெரிந்து கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்று உளவு பார்க்கட்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
 


இதனையடுத்து உளவுத்துறையிடமும் சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் எடப்பாடி. இரண்டு தரப்பும், நீங்கள் நம்பிய ஆட்கள் சரியாக நிவாரணத்தைக் கொண்டு மக்களிடம் சேர்க்கவில்லை என்ற  ரீதியிலேயே ரிப்போர்ட் கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக அவருடைய எடப்பாடி தொகுதியில் மட்டும் 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொறுப்பையும் நிதியையும் சிலரிடம் அவர் ஒப்படைத்து இருக்கிறார். ஆனால் அந்த நபர்களோ, பணத்தைப் பங்கிட்டுக் கொண்டு, ரேசன் பொருட்களை தங்களோட நிவாரணம் போல அதிகாரிகள் துணையோடு விநியோகித்து கொண்டனர் என்று எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்