Skip to main content

தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கவே நினைக்கின்றனர்: தமிழிசை சவுந்தரராஜன்

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
Tamilisai Soundararajan


 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் செய்தது காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் தான். மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை முடித்துவிட்டு அறிவிக்கப்படாத, ஆர்ப்பாட்டத்தை நடத்தி கைதாகி இருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். 
 

காவிரிக்கு அவர்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக துரோகம் தான் செய்துள்ளனர். 1974-ல் உச்ச நீதிமன்றத்தின் காவிரி வழக்கை தங்களது சுயலாபத்திற்காக வாபஸ் வாங்கியவர் தி.மு.க. தலைவர் கலைஞர். அதே போல 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தது. காவிரி மீது கவனம் செலுத்தாததற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
 

காவிரி மேலாண்மை வாரியம் என்றால் மாநிலங்களில் உள்ள அணைகள் முழுவதும் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். தமிழகமே இதற்கு ஒத்து கொள்ளாது. அதற்காக தான் நீரை மட்டுமே பங்கிடும் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருந்தது. தமிழகம் கூட அணைகளின் உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 
 

கர்நாடகாவில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், மிகப்பெரிய பிரச்சினை வரும். அதற்கு பா.ஜனதா தான் பொறுப்பு என்கிறார். காவிரி விவகாரத்தில் கொடுக்கப்படும் தீர்வு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகா மேல்முறையீடு செய்யும். அதற்காக பா.ஜனதா நிரந்தர தீர்வு காண வேண்டும் என நினைக்கிறது. 
 

ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு கமல் தூத்துக்குடிக்கும், நியூட்ரினோ பிரச்சினைக்கு வைகோ நடைபயணம் என தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கவே நினைக்கின்றனர். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்