Skip to main content

“உங்களால் பதவியை நிர்வகிக்க முடியாது!” - ஸ்டாலினுக்கு சவால்விட்ட எடப்பாடி!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Stalin can not manage the post says Edappadi

 

“ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால் வழக்குப் போடுங்கள் சந்திப்பதற்கு நான் தயார், நீங்க தயாரா; நான் ரெடி? நீங்க ரெடியா..?” என  திருவாரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்குப் பதிலடி கொடுப்பதுபோல “நானும் நீங்களும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் நீங்க தயாரா?” என ஸ்டாலினுக்கு, திருவாரூர் பிரச்சாரத்தில் சவால் விட்டிருக்கிறார் எடப்பாடி.

 

கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில், திமுக தலைவர் ஸ்டாலின், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தேர்தல் பிரச்சாரத்தை கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து துவங்கினார். மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தெற்கு வீதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "பத்து ஆண்டுகளாக தமிழகம் மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதிலும் இந்த நான்கு ஆண்டுகளில் அடி பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி எதைப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதைக்கூட தெரியாமல் பிதற்றுகிறார். ஜெயலலிதா இறப்பிற்கு கலைஞரும், ஸ்டாலினும்தான் காரனம் எனப் பேசுகிறார். நாங்கள்தான் காரனம் என்றால் நான்கு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள், அதுகுறித்து வழக்குப் போடுங்கள் சந்திக்க நாங்க தயார், நீங்க தயாரா, நான் ரெடி, நீங்க ரெடியா” என்று பேசினார்.

 

அதற்குப் பதிலடிகொடுப்பதுபோல் திருவாரூர் மாவட்டத்திற்குப் பிரச்சாரத்திற்கு வத்த பழனிசாமி பேசுகையில், “ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசுவார். இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகிவிடும் என அவர் பேசிவருகிறார். அதிமுகவை ஒழிக்கவோ அழிக்கவோ முடியாது. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என நினைத்தார்கள். அந்த கனவு பலிக்கவில்லை. அதிமுக கூட்டணி; வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி; சந்தர்ப்பவாதக் கூட்டணி. 

 

ஸ்டாலின் போகிற இடமெல்லாம் என்னுடைய ஆட்சியைக் குறை சொல்லியே வருகிறார். செல்வ செழிப்புடன் இருந்தவர் ஸ்டாலின். உங்க அப்பா கலைஞர் உயிருடன் இருந்தவரை பதவி வழங்கவில்லை. ஏன் என்றால் உங்க மீது அவருக்கு நம்பிக்கையில்லை. உங்களால் பதவியை நிர்வகிக்க முடியாது. உங்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார், நீங்க தயாரா?” என எடப்பாடி, ஸ்டாலினுக்கு சவால்விட்டுப் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.