Skip to main content

சிறைக்கு திரும்பும் சசிகலாவுடன் கே.என்.நேரு திடீர் சந்திப்பு: ஆட்சி மாற்றத்திற்கான முதற்கட்ட முயற்சி?

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
sasikala


கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் வந்துள்ள சசிகலா இன்று பெங்களூர் சிறைக்கு திரும்ப உள்ள நிலையில் அவரை தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார்.
 

சசிகலா சிறைக்கு புறப்பட்ட தயாராக இருந்த நிலையில், அவரது வீட்டுக்கு கே.என்.நேரு இன்று காலை சென்றார். சசிகலாவுக்கு அவர் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி மாற்றத்திற்கான முதற்கட்ட முயற்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
 

எனது அத்தான் எம்.என். நடராஜனும் கே.என்.நேருவும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் இன்று வந்து சந்தித்தார். மற்றபடி அரசியல் சந்திப்பு கிடையாது என சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். 
 

பரோல் முடிவதற்கு முன்னதாகவே 31ம் தேதி பெங்களூரு சிறைக்கு சசிகலா திரும்புவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்