Skip to main content

கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி நிர்பந்தம்.. பெற்றோர்கள் அவதி; தனியார் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
aru saravanan

 

 

"கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகளை திறப்பதில் அரசு மிகுந்த கவனம் வைக்க வேண்டும். தனியார் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலிப்பதை அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும் என முக்குலத்துப்புலிகள் அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது குறித்து முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன் கூறுகையில், "உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சுகாதார துறையினரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகம் முழுதும் பல தளர்வுகளோடு ஊரடங்கு நீடித்தாலும், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதித்தும்கூட, இ-பாஸ் உள்ளிட்ட கடுப்பாடுகள் விதித்தும், நோய் பரவலை அரசால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

 

இந்தநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு தற்போது அடுத்த வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் மற்ற மாணவ மாணவிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கரோனா தாக்கம் குறைந்து அடுத்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் அச்சமின்றி கல்வி கற்க உகந்ததாக இருக்கும். அரசு இந்த விஷயத்தில் அவரசம் காட்டாமல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும், தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது.

 

கரோனா ஊரடங்கால் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைவாய்ப்பின்றி குடும்பத்தை நடத்த, அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வரும் சூழலில் பல தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை செலுத்தக்கோரி எஸ்.எம்.எஸ். மூலம் நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு இதை கண்காணித்து இதுபோல் செயல்படும் தனியார் பள்ளிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்து அந்த கல்வி நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Principal of private school arrested in pocso

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல பள்ளி மாணவிகளுக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை இன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி உள்ளனர்.