Skip to main content

காலையில் கட்சி தாவல்... மாலையில் வேட்பாளர்... -வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

bjp

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு  20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் 05.03.2021-அன்று கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 17 பெயர்கள் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, எல்.முருகன்-தாராபுரம், எச்.ராஜா-காரைக்குடி, எம்.ஆர்.காந்தி-நாகர்கோயில், அண்ணாமலை-அவரக்குறிச்சி, வானதி ஸ்ரீனிவாசன்-கோவை மேற்கு, குஷ்பூ-ஆயிரம்விளக்கு, சரவணன்-மதுரை வடக்கு, சி.கே.சரஸ்வதி-மொடக்குறிச்சி, கலிவரதன்-திருக்கோவிலூர், நாயனார் நாகேந்திரன்-திருநெல்வேலி, தணிகைவேல்-திருவண்ணாமலை, பி.ரமேஷ்- குளச்சல், குப்புராமு-ராமநாதபுரம், பூண்டி எஸ்.வெங்கடேசன்-திருவையாறு, வினோஜ்.பி. செல்வம்-துறைமுகம், விருதுநகர் -பாண்டுரங்கன், திட்டக்குடி-பெரியசாமி என பட்டியல் வெளியாகியுள்ளது.

 

வெளியான வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சரவணன் திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ வாக இருந்த நிலையில், இன்று காலைதான் தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார் என்பதும், அவரது இணைவால், சரவணன் மதுரை வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற சந்தேகத்தில் மதுரையை சேர்ந்த பாஜகவினர் காலையிலேயே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதன்படியே காலையில் கட்சித் தாவிய சரவணன் இன்று மாலையே பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்