Skip to main content

கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு! - எல்.முருகன் பேட்டி!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

Official - alliance - announcement- soon! - bjp- l murugan

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்தித்தார்.

 

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி இடையே முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பிரச்சனை நீடிக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகளை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. அதே போல, புதிய கல்விக் கொள்கையின் தேவை குறித்து 50 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்