இந்தியா குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோடு அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் முஸ்லீம் அமைப்புகள் பல மாவட்டங்களை ஸ்தம்பிக்க வைக்க கூடிய அளவுக்கு பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவா்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக வும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பல போராட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனா். இதில் தற்போது மாவட்டம் தோறும் ஆயிரக்கணக்கானோரை திரட்டி ஆதரவு போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.
இதில் குமரி மாவட்ட பாஜக சார்பில் இன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் விதமாக பேரணி மற்றம் பொது கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா்.
இந்த பேரணியானது நாகா்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து கலெக்டா் அலுவலகம் வரை 2 கி.மீ தூரத்துக்கு நடந்தது. பின்னா் கலெக்டா் அலுவலகம் எதிரே பொதுக்கூட்டமும் நடந்தது. இதனால் அந்த 2 கிமீ தூரம் வரை பாஜக வின் கோஷமும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள்தான் காணப்பட்டனர். இதனால் நகரத்தின் அந்த முக்கிய பகுதி மூச்சு முட்டி ஸ்தம்பிக்க செய்தது. இதனால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடை செய்யப்பட்டது. பேரணியில் பாஜக பொதுச்செயலாளா் முரளிதரராவ், பொன்ராதாகிருஷ்ணன், எம்ஆா் காந்தி ஆகியோர் நடந்தே வந்தனா். இதையொட்டி அந்த பகுதி முமுவதும் போலிஸ் பாதுகாப்புக்க போடபட்டியிருந்தது.