Skip to main content

''மனிதன் உயிர்வாழ எப்படி இதயம் முக்கியமோ அதுபோல கட்சிக்கு தொண்டர்கள்''-ரவீந்திரநாத் பேட்டி!

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

 "Like the heart is important for human survival, volunteers for the party" - Rabindranath interview!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தற்போது வரை முற்றுப்பெறாத நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் மாறி மாறி செய்தியாளர்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ்-இன் புதல்வரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''அதிமுகவுடைய நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்  (ஓபிஎஸ்)  தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.  

 

அது அவருடைய மனநிலை மட்டுமல்ல ஒவ்வொரு ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்திருக்கின்றார். ஒரு மனிதன் உயிர் வாழவேண்டும் என்றால் இதயம் முக்கியம். ஹார்ட் முக்கியம். அது போல ஒரு இயக்கம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், இயங்க வேண்டும் என்றால் அதற்கு இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த தொண்டர்களுடைய எண்ணத்தை இயக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அந்த இயக்கம் வலுவாக நடைபெறும். அதிமுகவினுடைய நிறுவனத் தலைவர், ஏழைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர் வகுத்துத்தந்த பார்முலா, சட்டத்தினுடைய விதி, அதை தான் இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்