Skip to main content

''அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்''- துரை வைகோ பேட்டி!

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

 '' The government should reconsider this decision '' - Durai vaiko interview!

 

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 '' The government should reconsider this decision '' - Durai vaiko interview!

 

இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிமுக வரும் ஏப்ரல் ஐந்தாம் (நாளை) தேதி சொத்து வரி உயர்வு அரசாணையை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சி 'சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என வலியுறுத்தி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் துரை வைகோ, ''சொத்துவரி உயர்வால் வீட்டு வாடகை தொகை உயரும் நிலை உள்ளதால் சொத்துவரி உயர்வு செய்வதற்கான முடிவை தமிழக அரசு  மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து, அதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்'' என்றார். 

 

ஏற்கனவே இதேபோல் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸின் தலைவரான கே.எஸ்.அழகிரியும், 'சொத்துவரி உயர்வு தொடர்பான முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்