Skip to main content

புதிய நியமனங்களுக்குத் தடை ஏன்? எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவின் பின்னணி தகவல்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

admk


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58- இல் இருந்து 59 ஆக உயர்த்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு அறிவித்த இந்த அறிவிப்பால், பதவி உயர்வுக்குக் காத்திருந்த அரசு ஊழியர்களும், புதிய வேலை வாய்ப்புக்காகக் காத்திருந்த இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். அதாவது, கடைநிலை ஊழியர்களுக்கு மட்டும் வயது வரம்பு நீட்டிப்பு பொருந்தாது என்று சொல்கின்றனர். 
 


இது பற்றி விசாரித்த போது, அரசு நிர்வாகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கான செலவினங்களைக் குறைக்கலாம் என்பது உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் பாலிஸி. அதனால் தான் அது அரசுப் பணியாளர்களைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும், மாநில அரசுகளையும் தொடர்ந்து நிர்பந்திக்கிறது. இதன் அடிப்படையில் தான், கடும் எதிர்ப்புக்கு நடுவிலும் தற்போது எடப்பாடி அரசு, முதற்கட்டமாக புதிய நியமனங்களுக்குத் தடை விதித்துள்ளது. ஆட்குறைப்பு செய்தால்தான் கடன் கிடைக்கும் என்பதாலேயே இந்த நடவடிக்கை என்றும் சொல்லப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்