Skip to main content

“அ.தி.மு.க. காரர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி ஜெயலலிதா எப்படி இறந்தாங்க என்பதே..” - உதயநிதி ஸ்டாலின்

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

DMK Youth wing leader udhayanithi stalin speech on trichy


தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை லால்குடி பகுதியில் தன்னுடைய 17வது நாள் பிரச்சாரத்தை தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன்பாக பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர், “என்னை தொடர்ந்து கைது செய்து தி.மு.க.வின் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவிய காவல்துறைக்கு என்னுடைய நன்றி. 

 


மிகப்பெரிய எழுச்சியைப் பார்க்கிறேன் சுமார் 2, 3 மணி நேரம் மக்கள் எனக்காக காத்து இருக்கிறார்கள். நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் யார் வரவேண்டும் என்று. ‘உங்களுடைய தாத்தா செய்ததும்; அடுத்து உங்களுடைய அப்பா செய்யப்போகிறது நீங்கள் உறுதிப்படுத்துங்கள்’  என எல்லா கோரிக்கைகளையும் மக்கள் உரிமையாக கேட்கிறார்கள்.

 


பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு கட்சி ராஷ்ட்ரிய லோக் சந்திரிகா என்று கட்சி, அமைச்சரவையில் இருந்து விலகி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 50 விவசாயிகள் இறந்துள்ளனர். எனவே, நாங்கள் ராஜ ஹோமம் செய்கிறோம் என்று வெளியேறி விட்டனர்.

 

எடப்பாடி, என்றும் படிப்படியாக வளர்ந்து வரவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வந்தார். அதிலும் நாற்காலி மேஜை என்று ஒவ்வொன்றுக்கு புகுந்து வந்தவர். மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு என்ற வகுப்புகளுக்கு எல்லாம் பொதுத்தேர்வு நடத்துகின்றனர். 

 

ஆனால் இந்த அடிமைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்து நீட் தேர்வை உள்ளே நுழைய விட்டு போனதை தொடர்ந்து கொலை செய்கிறனர். அதற்கு உதாரணம் தான் அனிதா. அந்த மாணவியின் மரணம் என்றும் அழியாத நினைவுகளாக இருக்கிறது.

 

மற்றொரு மாணவர் விக்னேஷ், அவருடைய வீட்டுக்கு நான் சென்றபோது என்னுடைய கையை பிடித்து அவருடைய தந்தை, ‘இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என்னால் செலவு செய்து தனித்தனி பயிற்சி கொடுத்து அனுப்ப முடியாது. அதற்கான வசதி என்னிடம் இல்லை. எனவே, ஸ்டாலினிடம் கூறி இதை ரத்து செய்ய முயற்சி எடுங்கள்’ என்று கூறினார்

.


கண்டிப்பா தி.மு.க. தலைவர், ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தி நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். எஸ்.பி.வேலுமணி, எல்.இ.டி.பல்பு வாங்குவதில் ஊழல், ஜெயகுமார் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல் என எல்லாவற்றிலும் ஒரு ஊழல். 

 

ஊழல் பட்டியலில் கையில் வைத்துக்கொண்டுதான் பா.ஜ.க., சி.பி.ஐ. வைத்து மிரட்டி வருகிறது. எனவே அவர்களுக்கு பயந்து தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளே அனுமதித்து வருகின்றனர். 

 

சூரப்பாவின் மீது 700 கோடி ரூபாய் ஊழல் வழக்கு உள்ளது. ஆரம்பத்திலிருந்தே தலைவர் ஸ்டாலின் அவரை வேண்டாம் என்று கூறினார்.

 


1996ல் திருவரங்கத்தை வெற்றி பெற்றோம். மே மாதம் நடக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்த திருவரங்கம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி, எந்த தொகுதியில் நின்றாலும் நாம் தோற்கடிக்க வேண்டும்.


 
தி.மு.க. தலைவர் விரைவில் ஒரு வெற்றி கூட்டணியையும் வெற்றி வேட்பாளர்களையும் அறிவிப்பார். அவருடைய வாக்குறுதிகளுக்கு காத்திருங்கள், அவருடைய அறிவிப்பை செயல்படுத்துங்கள்.

 

எந்த அ.தி.மு.க. காரர்களாக இருந்தாலும் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி, ஜெயலலிதா எப்படி இறந்தாங்க என்பதே. இதை கேளுங்கள், அவர் ஓடி விடுவார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது எல்லா அமைச்சர்களும் நேரில் சென்று பதவி ஏற்கும் போது தேம்பித் தேம்பி அழுதவர்கள், ஜெயலலிதா இறந்த பிறகு ஒருவர் கூட அழவில்லை. 

 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு கட்சியினுடைய தலைவர் அவருடைய இறப்பில் நிற்கக்கூடிய சந்தேகங்களை கேட்பதற்கு கூட அ.தி.மு.க.வால் முடியவில்லை. ஒரு அடிப்படை தொண்டன்கூட அதற்கான கேள்வி எழுப்ப முடியவில்லை.

 

கோவில் பழுதடைந்து உள்ளது எனவே மறுசீரமைக்கவும், ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தலைவரிடம் முன்வைக்கிறேன்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.