Skip to main content

"எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா...!" பாமக நிறுவனர் ராமதாஸிற்கு திமுக எம்.பி பதிலடி!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

pmk

 


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், நோய்த்தொற்று குறைவாக உள்ளதால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 


இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தருமபுரி திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். அதில், "உங்களால் முடியும் ஐயா உங்களால் முடியும். எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா. சரி தானே ஐயா" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்