Skip to main content

எந்த ஒரு உதவியும் விவசாயிகளுக்கு திமுக செய்யவில்லை; வானதி சீனிவாசன் பேட்டி!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

ddd

 

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில், 450 பெண்கள் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது, மத்தியில் இருக்கும் அரசாங்கம் எப்படிப் பெண்களை முன் நிறுத்தி நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதைப் பல கூட்டங்களில் சென்று தொடர்ந்து விளக்கி வருகிறேன். தமிழகத்துப் பெண்களிடம் பிரதமர் மோடி எப்படி ஹீரோவாக இருக்கிறார் என்பதை விளக்கி வருகிறோம்.

 

பா.ம.கவினர் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுப்பவர்கள் மட்டுமே கூட்டணி எனக் கூறி உள்ளனர். இதில், சாதி வாரி கணக்கெடுப்புக்காக தமிழக அரசு ஆணையம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். அறிவியல் ரீதியாகக் கணக்கெடுப்பு என்பது கண்டிப்பாகத் தேவைதான். பா.ம.க. கேட்பது குறித்து மாநிலத் தலைவர் எல்.முருகன் ஏற்கனவே தன் கருத்தைக் கூறி விட்டார்.

 

வேளான் சட்டங்களுக்கு ஆதரவாக முன்னர் பேசிவிட்டு, தற்போது கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் திமுகவை மாதிரி பொய்ப் பேச யாராலும் முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேட்கிறேன், சன் டிவி குடும்பம் எத்தனை கோடி சம்பாதித்து வருகிறார்கள்? கலைஞர் டிவியில் எவ்வளவு சம்பாதித்து வருகிறார்கள்? ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கிய உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் எத்தனை விவசாயிகளுக்கு உதவி இருக்கிறார்? விவசாயத் துறையில் திமுக குடும்பத்தின் முதலீடு என்ன? எந்த ஒரு உதவியும் விவசாயிகளுக்கு திமுக செய்யவில்லை.

 

கூட்டணியைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினாலும் இன்னும் கூட்டணி குறித்த ஒரு முழுமையான தகவல் தலைமையிடமிருந்து அறிவிக்கப்படாத நிலையில், அந்தக் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுக எப்படி தன்னுடைய பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளதோ, அதேபோல பாஜகவும் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறது. எனவே கூட்டணி குறித்த எல்லா முடிவுகளையும் பாரதிய ஜனதா தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.