Skip to main content

டெல்லி கலவரத்தில் குழந்தைகளோடு சிக்கிய பள்ளி வாகனம்... பரபரப்பை ஏற்படுத்திய நிமிடங்கள்... வைரலாகும் வீடியோ!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

கடந்த 15 ஆம் தேதி டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் போலீசார் மாணவர்களை கடுமையாக தாக்கியது சர்ச்சியாயி ஏற்படுத்தியது. இந்த சூழலில், கல்லூரி மாணவர்கள் தில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவினாலும் அது எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூர் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

incident

 


இந்த நிலையில் கலவரம் குறித்து வெளியாகியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், பள்ளி வாகனம் ஒன்று கலவரத்தில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த வாகனத்தில் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து தகவல் தெரியவரவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற கலவரங்கள் நாடு முழுவதும் ஏற்பட்டால் நாடு பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அமித்ஷாவிற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்