Skip to main content

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 மாதங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும்! கவன ஈர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்!

Published on 26/04/2020 | Edited on 26/04/2020

 

ஊரடங்கு மற்றும் தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் அவரவர் வீட்டு வாசலில் கருப்பு துணியோடு உரிய இடைவெளியுடனும் பாதுகாப்புடனும் நிற்கும் படி கவன ஈர்ப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. 

 

ccc


 

அதன்படி இன்று மாலை, கரோனா நெருக்கடியை வெல்லவும் பசியிலிருந்து மக்களை காக்கவும் உடனே 5 இலட்சம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும். நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து உணவு தானியங்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும். மாநில அரசுக்குத் தேவையான நிதி வழங்க வேண்டும்.     மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் கவன ஈர்ப்பு இயக்கத்தினரும், அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் கருப்பு துணியோடு அவரவர் வீட்டு வாசலில் நின்றனர். 

 
தியாகு (தழ்த் தேசிய விடுதலை இயக்கம்), வழக்கறிஞர் சி. ராஜு (மக்களதிகாரம்), கோவை கு. இராமகிருட்டிணன் (பெரியார் திராவிடர் கழகம்). திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), சிவ, செந்தமிழ்வாணன் (தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்), பாலன் (தமிழ்த் தேச மக்க்ள் முன்னணி),     நாகை. திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி), கொளத்தூர் தா.செ. மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி),  சிதம்பரநாதன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மக்கள் விடுதலை), வாஞ்சிநாதன் (மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்), சௌ. சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), கே.பி. மணிபாபா (தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி), அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), பார்த்திபன்   (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள்), கரு. தமிழரசன் (தமிழ் சிறுத்தைகள் கட்சி), அருள்மொழிவர்மன் (மக்களரசுக் கட்சி), ம. முகமது கவுஸ் (வெல்ஃபேர் கட்சி), காசு. நாகராசன் (தமிழ்நாடு திராவிடர் கழகம்) ஆகியோர் அவரவர் வீட்டு வாசலில் நின்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தினர். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி மோதி விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலையில், நேற்று (24-01-24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான  சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. காரிலிருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2024 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோயம்புத்தூர் டவுன்ஹால், அசோக் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (56), விமல் (28), அனுஷ்கா (23) ஜெனிபர் (29) ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 

Chief Minister Relief Notification on Truck collision accident in Toppur Kanavai area

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.