Skip to main content

ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி? - இன்று வெளியாகியது திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்!  

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

A constituency for the All India Forward Bloc Party? - The constituencies where the DMK alliance parties are contesting were released today!

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொ.ம.தே.கவிற்கு 3 தொகுதி, த.வா.கவிற்கு 1 தொகுதி என  ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (10.03.2021) மதியம் 12 மணிக்கு வெளியாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்