Skip to main content

“ராமருக்கு மோடி கோவில் கட்டமாட்டார் நாங்கதான் கட்டுவோம்” காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் செய்தியாளா்களிடம் பேசும்போது, “நாட்டில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி மக்களுக்கு மாதம் தோறும் ரூ. 6 ஆயிரம் அறிவித்ததோடு விவசாயத்துக்காக தனி பட்ஜெட்டையும் காங்கிரஸ் தர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம். நாட்டில் வறுமையை ஓழிக்க காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். 

 

ks azhagiri


              

1947-ல் சுதந்திரம் அடைந்த நேரத்தில் நாட்டில் 90 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தார்கள் தற்போது 20 சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள். வறுமையை விரட்டிய பெருமைகள் காங்கிரஸ் தலைமையைதான் சாரும். ஆண்டு தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா 72 ஆயிரம் ருபாய் வழங்கினால் மூன்றரை லட்சம் கோடி செலவாகுமே அது சாத்தியமாகுமா என பாஜக கேட்கிறது. இந்தியாவின் ஆண்டு வருமானம் 230 லட்சம் கோடி ரூபாய், காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அது 400 லட்சம் கோடியாக மாறும் அதிலிருந்து மூன்றரை லட்சம் கோடி ஏழைகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை.

              

பாஜக பட்ஜெட்டில் ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் ராமர் கோவில் கட்டமாட்டார்கள் கட்டினால் அதோடு பாஜக கட்சியும் முடிந்து விடும். அதை வச்சிதான் பாஜக அரசியல் செய்கிறது. ராமருக்கு கோவில் நாங்க தான் கட்டுவோம் அதுவும் பாபர் மசூதி இருந்த இடத்தில் அல்ல. பள்ளி வாசல் தேவாலயங்களை இடித்தும் அல்ல.  நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பிரச்சனை இல்லாத இடத்தில் கட்டுவோம். ராமரின் உண்மையான சீடரே மகாத்மா காந்திதான் அவர் ராமருக்கு கோவில் கட்டினார் அவருடைய இதயத்தில். 

         
 
மோடியின் கையில் இருந்தால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்கிறார் எடப்பாடி. மோடியின் கையில் இருக்கிற எடப்பாடிக்கே பாதுகாப்பு இல்லாதபோது எப்படி இந்தியாவுக்கு பாதுகாப்பு இருக்கும். அரசு ஊழியர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கிடைக்காது என்பதால் தபால் ஓட்டு சீட்டுகளை பெரும்பான்மையினருக்கு வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்