Skip to main content

மாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 17 ந் தேதி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பங்கீடு பற்றி முடிவெடுத்தக் கொள்வதாக ஆலோசிக்கப்பட்டது.
 

தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க தெற்கு மா.செ  (பொ) திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ பேசும் போது.. 

 

dmk ragupathi



உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.  அதாவது ஒரே தொகுதி தொடர்ந்து பொது தொகுதியாகவும், அதே போல தொடர்ந்து தனித் தொகுதிகளாகவும் உள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி தி.மு.க கோர்ட்டுக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக நாங்க போகமாட்டோம். 
 

அடுத்து மாவட்ட ஊராட்சி குழுவுக்கும் பிரிச்சாச்சு. ஆனால் இப்ப மாவட்டம் பிரிச்சாச்சு. அதன் பிறகு மறு சுழற்சி வரவேண்டும். இப்ப 32 மாவட்டம் பிறகு 37 மாவட்டமாகும். அதில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதெல்லாம் வச்சு நீதிமன்றம் போக வைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் போகமாட்டோம். தேர்தலைச் சந்திக்கும் தில் எங்களிடம் உள்ளது.


 

உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது கலைஞர் ஆட்சி காலத்தில் காவிரி – குண்டாறு – வைகை திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ. 600 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூரில் தடுப்பணையும் கட்டப்பட்டு ஆரம்பகட்டப்பணிகள் நடந்துள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. ஆனால் தி.முக. ஆட்சி வந்திருந்தால் 2012 – 13 லேயே திட்டத்தை தி.மு.க நிறைவேற்றி இருக்கும். ஆனால் அ.தி.மு.க 2011 ல் கையில் எடுக்காத அ.தி.மு.க அரசாங்கம் இப்ப 2020 ல் திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளதாக அறிவிக்லாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ரோடு போட மட்டும் தான் பணம் வச்சிருக்காங்க. மற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருக்காது. ஏன்னா, ரோட்ல தான் 20 சதவீதம் கமிசன் கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ. 600 கோடிக்கு இப்ப ரோடு போடும் பணி ஒதுக்கப்பட்டு அதில் கிடைக்கும் ரூ. 120 கோடியை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
 

கடந்த சில நாட்களாக நடக்கும் மனு நீதி முகாம் என்பது பிளேயிங் விசிட். 100 நாள் வேலை பெண்களை வைத்து படம் எடுத்துக் கொண்டு போறாங்க. மக்களிடம் வாங்கிய மனு என்ன என்று சொல்ல முடியுமா?  இப்ப தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பிளேயிங் விசிட் முகாம் நடத்துறாங்க. அரை மணி நேரத்தில் 2 ஆயிரம் மனு வாங்குவது சாத்தியமா?
 

இன்று நடக்கும் கூட்டுறவு வார விழாவுக்காக பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அறந்தாங்கி ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் ஆகிய எம்.எல்.ஏக்கள் பெயர்கள் உள்ளது. 


 

அதனால எங்கள் ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் சரியாக நடக்கவில்லை என்று கலைக்கப்படும். அத்தனை கூட்டுறவு சங்க தலைவர்களிடம் இருந்தும் இந்த விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேள்விக்கு? ஆட்சியர் அ.தி.மு.க பிரமுகர் ஆகிட்டாங்க. எப்படி விளக்கம் கேட்கிறது என்று கூறினார். 
 

இந்த வீடியோ நக்கீரன் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் திவான் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் திருமயம் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார் ரகுபதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

மேலும் அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தி.மு.க வடக்கு மா.செ (பொ) வழக்கறிஞர் செல்லப்பாண்டியனும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.தி.மு.க நிர்வாகி போல செயல்படுவதாக கூறியுள்ளார் என்று அவர் மீதும் புகார் கொடுக்க அ.தி.மு.க வினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Private bus overturned accident; 20 people were injured

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; திமுக அரசைக் கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
DMK struggle against DMK government

தமிழகத்தைக் கஞ்சா , கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்கள் தள்ளாடும் நிலைமைக்கு திமுக அரசு கொண்டுசென்றதாகக் கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எதற்கெடுத்தாலும் முன்னே வந்து நிற்கும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஏன் வந்து சந்திக்கவில்லை? தனது மகனை அனுப்பி 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன்?

ஒட்டுமொத்த தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களின் இல்லத்தின் வாசல் முன்பே கருப்பு சட்டை அணிந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்து அதை ஏன் செய்யவில்லை, அதேபோல் ஸ்டாலின் தங்கை கனிமொழி தமிழக முழுவதும் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாக உள்ளதாகக் கூறிய பொழுது தற்பொழுது திமுக ஆட்சி வந்த பின்பு ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு பாதுகாப்பான அரசு எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பெண்கள் தற்பொழுது தங்களது கணவரை இழந்து வாடி வருகின்றனர். இதற்கு என்ன பதில் கூறுவார். நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார் இதுவரை தமிழகத்தில் எத்தனை சாலை சரியாக உள்ளது? கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிரிழப்புக்கு என்ன காரணம் என டெல்லி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டுமெனவும் மக்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டும்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அமைத்த பேருந்து நிறுத்தத்தை ஏன் அகற்றினீர்கள்?  இதுதான் உங்களது பணியா? பணத்தை வைத்து மக்களின் வாயை மூடி விடலாம் என நினைக்கும் இந்த அரசை நம்ப கூடாது அதேபோல் இந்த சம்பவத்திற்கு காரணம் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். திமுக அமைச்சர் முத்துசாமி இத்தனை உயிர் இழப்புக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

இது இந்த பட்டியலின மக்கள் வேறு எங்காவது உயிரிழந்தால் வாய் திறக்கும் நிலையில், தற்போது இங்கு நடந்த உயிரிழப்புக்கு ஏன் திரைத்துறையினர் வாய் திறக்கவில்லை? இந்தக் கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பணம் வழங்கிய இந்த அரசு உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கும் மீனவர் குடும்பத்திற்கும் பணம் வழங்குகிறதா? என கேட்டுகொண்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரூ.10 லட்சம் கொடுத்தது இதற்கு தீர்வு கிடையாது. இது பெண்களைப் பாதுகாக்கும் அரசு கிடையாது. ஆயிரக்கணக்கான பெண்கள் தாலி இழந்து வாழ்க்கை இழந்து உள்ளனர். உண்மைக்கு புறம்பானவை மட்டுமே சட்டசபையில் முதலமைச்சர் பேசியுள்ளார். சிபிசிஐடி விசாரணை வைத்து அனைத்தும் மூடி மறைக்க பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம்  கள்ளக்குறிச்சியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான். வழக்கை சிபி.ஐ க்கு மாற்றக் கோரி தேமுதிக தொடர்ந்து போராடும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்” என்றார்.