/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-oath-art_2.jpg)
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (25.06.2024) நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி ஒருமனதாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியம் தொடர வேண்டும் வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங். இதற்கிடையே மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பிகளில் ஒருவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இன்று தனது வேட்புமனுவைத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul-gandhi-one-hand-art_5.jpg)
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “சபாநாயகராகப்போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ராஜ்நாத் சிங்கிடம் கூறியுள்ளோம். ஆனால் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங், மல்லிகார்ஜுனகார்கேவை அழைத்து சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்போம். மேலும் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)