Skip to main content

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் மீண்டும் சரிவைச் சந்தித்த ஆளும் பா.ஜ.க.!

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் மீண்டும் ஆளும் பா.ஜ.க. அரசு மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்டப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் நகராட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்கள் பல இடங்களில் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Rajastan

 

ஆறு மாவட்டப் பஞ்சாயத்து சீட்டுகளில் நான்கு, 20 பஞ்சாயத்து சமிதி சீட்டுகளில் 12 மற்றும் ஆறு நகராட்சி சீட்டுகளில் நான்கு என காங்கிரஸ் வெற்றி விவரம் நேற்று வெளியானது. இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளார்களும் ஜில்லா பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதி சீட்டுகளில் தலா ஒன்றில் வெற்றில் பெற்றதால், இது ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கடும் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ‘இது கட்சி ஊழியர்களின் உழைப்புக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு வெற்றி. கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.க. அதன் மக்கள் விரோதக் கொள்கைகளால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீரழித்திவிட்டது’ என தெரிவித்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்