Skip to main content

40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா... கரோனா வைரஸ் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... கோபத்தில் காங்கிரஸார்!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 31 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 

bjp

 


இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறுவது போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தியை குறிப்பிட்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. அதில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. - செய்தி இதை 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா நம்ம நாடு இன்னும் சிறப்பா இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்