Skip to main content

ரஜினி கட்சி ஆரம்பித்தால் செந்தில் பாலாஜி இணைவாரா? அதிமுக அமைச்சர் பேச்சால் பரபரப்பு! 

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

அதிமுகவில் தொடக்கத்தில் மாணவரணி பொறுப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பு 2011ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு வழங்கினார். அதற்கு அடுத்து 2016 மே தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என அதிமுக இரண்டானது. இதில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்பு தினகரன் உடன் கருத்து வேறுபாட்டால் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்து மீண்டும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
 

dmk



இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய செந்தில் பாலாஜி அதிமுக அரசின் திட்டங்களை விமர்சித்து  பேசினார். அப்போது செந்தில் பாலாஜி பேசும் போது குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்த போது உடலும், உயிரும் அதிமுகவிற்காக இருக்கும் என்று பேசியிருந்தார். ஆனால் அதன் பின்னர் சில மாதங்களில் டிடிவிதினகரன் பக்கம் சென்று அதே வசனத்தை பேசினார். தற்போது முக ஸ்டாலின் பக்கம் இருக்கும் செந்தில் பாலாஜி மீண்டும் அதே வசனத்தை பேசி வருகிறார். எதிர்காலத்தில் அவர் ரஜினி கட்சியில் சேர்ந்தாலும் தன் உடலும் உதிரமும் உள்ளவரை ரஜினிக்கு ஆதரவு என செந்தில்பாலாஜி கூறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்