Skip to main content

சசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்... நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

admk



கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி முதல்வர் எடப்பாடியை, மருத்துவ நிபுணர் குழு சந்தித்து ஊரடங்கு தொடர்வது குறித்த தன் கருத்துகளைக் கூறியிருந்தனர் . இந்தச் சந்திப்பு முடிந்ததும், அது குறித்து மீடியாக்களிடம் விளக்கவேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அந்தத் துறையின் செயலாளரான பீலா ராஜேஷும் அமைதியாய் இருக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் எனப்படும் ஐ.சி.எம்.ஆரின் துணை இயக்குநரான பிரதீப் கவுர்தான், இவங்களுக்குப் பதில் ஊடகத்தினரைச் சந்தித்து, ஊரடங்கை நீட்டிக்கும்படி தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்று அறிவித்தார். இதுபோன்ற செயல்களால் அப்செட்டாகி இருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும், எடப்பாடியின் போக்கு குறித்தும், சசிகலாவின் ரிலீஸ் குறித்தும் அடிக்கடி தங்களுக்குள் ரகசியமாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
 

ஆனால் இந்த நேரத்தில் சசிகலாவும் பலத்த அப்செட்டில் இருப்பதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி விசாரித்த போது, ரிலீஸ் கனவில் இருக்கும் சசிகலா, வெளியே வந்ததும் அ.தி.மு.க.வைப் பழையபடி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். அமைச்சர்கள் தரப்பிலிருந்தும் அதற்கு நிறைய க்ரீன் சிக்னல்கள் கிடைத்திருக்கு என்கின்றனர். அதனால், தன் பவரை நிலைநாட்டும் ஆயுதமாக, இரட்டை இலை சின்னம் தொடர்பான உச்சநீதிமன்ற சீராய்வு மனுவைத்தான் அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், நீதிமன்றமோ தற்போது, சசிகலா தரப்பு மணுவைத் தள்ளுபடி செய்து, ஆளும்கட்சியான எடப்பாடித் தரப்புக்கே இரட்டை இலை என்று கூறிவிட்டது. அதனால் அவரும் தற்போது படு அப்செட்டில் இருப்பதாகக் கூறுகின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்