Skip to main content

புரட்சி புஸ்வாணமாகிவிடும்... ரஜினி கருத்துக்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து... அதிருப்தியில் பாஜகவினர்!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

நேற்று லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற  நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர்  என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.
 

bjp


 

bjp



இந்த நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் நடிகர் ரஜினி கட்சி வேற.. ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்கணும் என்று பேசியது குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. புரட்சி இந்தியாவில் வெடிக்காது புஸ்வாணமாகிவிடும்.  கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முட்ங்கும்.  இதுவே வரலாறு என்றும், நாமதான் நாலாவது தூணுன்னு சொல்லிகிட்டே பொறுக்கிங்களை விட்டு கல் எறிஞ்சு கலாட்டா பண்ணச்சொல்லவன் ஊர் பஞ்சாயதுக்கு கிளம்பினான் நீதி சொல்ல.  இது எப்டி இருக்கு" என்று சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் எஸ்.வி.சேகர் கருத்துக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு நேற்று ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில் எஸ்.வி.சேகர் கருத்து பாஜகவினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்