Skip to main content

திடீரென ஊருக்குள் புகுந்த சிங்கம்... திகைத்து நின்ற மக்கள்! (வீடியோ)

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

சிங்கம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுவாரசியமான வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிங்கம் ஒன்று வேகமாக மக்கள் கூட்டத்தில் புகுந்து வெளியே ஓடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 


இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அவர், " மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் பாய்ந்து வருவதை நினைத்து பாருங்கள். உலகின் அதிவேக மனிதனான உசேன் போல்ட் கூட இந்த வேகத்தின் முன் தப்பிச் செல்ல முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சகிப்பு தன்மை என்பது இங்கே மட்டுமே காண முடியும்" என்று அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்