Skip to main content

போராட்டம் தொடரும்; திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி - விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு!

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

FARM UNION LEADER

 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

 

இந்தநிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் முறைப்படி வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிராந்திகாரி கிசான் யூனியன் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் சிங், தங்களது போராட்டம் தொடரும் என்றும், பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புவதாகவும்  கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக தர்ஷன் பால் சிங், "நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எங்கள் நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். 22 ஆம் தேதி லக்னோ பேரணி நடைபெறும். 26 ஆம் தேதி, போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் கூட்டம் நடைபெறும். 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், "வேளாண் சட்டங்களை தவிர குறைந்தபட்ச ஆதார விலை, எங்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறுவது, மின்சார சட்ட திருத்த மசோதா, காற்று தர மேலாண்மை ஆணைய அவசர சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறுவது, இறந்த எங்களின் நண்பர்களுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது ஆகிய பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. இந்த பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.