Skip to main content

மக்கள் ஆளுநர்; மக்களுக்கான ஆளுநர்! தமிழிசைக்கு அதிகரிக்கும் ஆதரவு!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Tamilisai Soundararajan pondichery Governor


தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக, பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியில் இரு மாதங்களுக்கு முன்பு நியமித்தது மத்திய அரசு. பாண்டிச்சேரியின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து மக்களோடு மக்களாக இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார் டாக்டர் தமிழிசை.

 

அடிப்படையில் இவர் டாக்டர் என்பதால், கரோனா பரவல் நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் கரோனாவுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மத்திய அரசிடமும், தெலங்கானா மாநில அரசிடமும் கலந்து பேசி, பாண்டிச்சேரிக்கு தேவையான தடுப்பூசிகளை வரவழைத்து, பாண்டிச்சேரி சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசின் பெரிய மருத்துவமனைகள் வரை நேரடியாக ஆய்வுசெய்து, நோயாளிகளின் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்ததுடன் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரிடமும் உரையாடி, “நோயாளிகள் அனைவருக்கும் தரமான சிகிச்சையளிக்க வேண்டும்; சிகிச்சையளிப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நான் சரி செய்கிறேன்’’ என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எதிர்பார்ப்புகளையும், சிரமங்களையும் கேட்டறிந்து அதனையும் சரி செய்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகையில் தன்னை சந்திக்கும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் தமிழிசை, பல வருடங்களாக விதவைகள் மற்றும் முதியவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதையறிந்து, அவர்களுக்கான உதவித் தொகையை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அந்தப் பணம் விடுவிக்கப்பட்டுப் பலனாளிகளுக்கு கிடைத்து வருகிறது.

 

இந்த சூழலில், மக்களின் குறைகளைக் கேட்க அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தமிழிசை செல்லும்போது, “அம்மா, நீங்க இங்கேயே இருந்திடுங்கம்மா! தெலங்கானா பக்கமெல்லாம் போக வேணாம்” என்று வலியுறுத்துகிறார்கள். அதைக் கேட்டு சிரித்துக்கொள்கிறார் தமிழிசை! இந்த நிலையில், தமிழிசையின் பணிச் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அவருக்கு, ஓய்வுபெற்ற ஐபிஎஸ். அதிகாரியான ராஜஸ்தானைச் சேர்ந்த ஆனந்த்பிரசாத் மகேஷ்வரியையும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த சந்திரமவுலியையும் ஆலோசகர்களாக நியமித்துள்ளது மத்திய அரசு. சமீபத்தில் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 

அவர்கள் இருவரும் கவனிக்க வேண்டிய துறைகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார் தமிழிசை.  எந்த துறைகள் குறித்து தமிழிசைக்கு தகவல்கள் தேவையோ, அதனை சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் பேசி, அதனை வாங்கி தமிழிசையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள் ஆலோசகர்கள். மேலும், மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை சரி செய்வதில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்கிற நிலையான உத்தரவை அழுத்தமாக பதிவு செய்துள்ளாராம் தமிழிசை. இதனால், பாண்டிச்சேரியின் தலைமைச் செயலகம் சுறுசுறுப்பாகவே இருக்கிறது என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள். மக்கள் நலனில் அக்கறை காட்டுவதால் பாண்டிச்சேரி மக்களிடம் தமிழிசைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.