Skip to main content

மராட்டியத்தில் மீண்டும் வென்ற தமிழர் கேப்டன் தமிழ்செல்வன்...

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

மராட்டிய மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

 

tamilian won maharashtra assembly election

 

 

தமிழர்கள், மற்றும் பல வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சயான் கோலிவாடா தொகுதியில்  பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்கப்பட்டார் தமிழரான கேப்டன் தமிழ்செல்வன். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலும் கணேஷ் குமார் யாதவ் என்ற ஒரு தமிழரே களமிறக்கப்பட்டார்.  கடும் போட்டிகளுக்கு மத்தியில் கேப்டன் தமிழ்செல்வன் 13921 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக எம் எல் ஏ ஆகியுள்ளார்.

கேப்டன் தமிழ்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள  பிலாவிடுதி கிராமத்தில் பொதுவுடைமை குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றவர் ரயில்வே பார்சல் பிரிவில் கூலி வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பார்சல் ஒப்பந்தம் எடுத்து பலருக்கும் வேலை கொடுத்து வருகிறார். 

தீவிரவாதி கசாப் தாக்குதல் நடத்திய போது காயமடைந்த பலரையும் பார்சல் ஏற்றும் தள்ளுவண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டு வந்து காப்பாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு.

கூலி தொழிலாளிகள் நிறைந்த பகுதியில் அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதால் அவரை கேப்டன் என்று அப்பகுதி மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் மட்டுமின்றி அங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பு காட்டியதால் கடந்த முறை பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

கடந்த ஜூன்  13 ந் தேதி தனது மகள் திருமணத்திற்கு மராட்டிய முதல்வரை புதுக்கோட்டை அழைத்து வந்து நடத்தினார். இந்த நிலையில் தான் தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மராட்டிய சட்டமன்றத்திற்கு செல்லும் கேப்டன் தமிழ்செல்வன். அமைச்சரவையில் இடம் பெறவும் அதிக வாய்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.