Skip to main content

ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

 

sub

 

இரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உர்ஜித் படேல் அறிவித்தார். ஏற்கனவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பிரச்சனை நிலவி வந்த நிலையில் இந்த பதவி விலகல் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸை புதிய ஆளுநராக  மத்திய அரசு நியமித்தது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, 'ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸை நியமித்தது தவறான முடிவு. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்து பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர் அவர்.  ப.சிதம்பரத்தை நீதிமன்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றியவர் சக்தி கந்த தாஸ். எதற்காக இதை அவருக்குச் செய்தார் என்பது எனக்குத் தெரியாது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்' எனவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்