Skip to main content

தனிநபர் கணினிகள் கண்காணிப்பு; மத்திய அரசுக்கு புதிய சிக்கல்...

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

tyjfdy

 

தனிநபர் கணினிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்குவதாக கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் தனிநபர் கணினிகளை கண்காணிக்க வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகள் அதிகாரம் பெற்றன. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனி நபர் பாதுகாப்பு, இதன் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து அடுத்த 6 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்