Skip to main content

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் –நாராயணசாமி

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
 

puducherry


கூட்டத்திற்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, தி.மு.க (வடக்கு) மாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் நிலம் மற்றும் கடல் பகுதி என  116 இடங்களை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என பிரதமருக்கும், பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 12-ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்