மத்தியப்பிரதேச மாநிலம் உத்வட் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த மாணவருக்கு கணிதம் தேர்வு நடந்த நிலையில், வகுப்பறையில் செல்போனை வைத்து விடையை பார்த்து எழுதியுள்ளார்.
இதனைப்பார்த்து ஆசிரியர் மாணவரின் செல்போனையும், விடைத்தாளையும் பிடிங்கி வைத்துக்கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். பின்னர், ஆசிரியர் அந்த மாணவனிடம் வேறு ஒரு வினாத்தாளை கொடுத்துத் தேர்வு எழுத வைத்துள்ளார். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற மாணவர் ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தேர்வை செல்போன் வைத்து எழுதி மாட்டிக்கொண்டதால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.