Published on 04/07/2018 | Edited on 04/07/2018
கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு சிறப்பு இடம் ஒதுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் கேரளாவிலுள்ள திருநங்கைகளின் வாழ்வாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில் 20 சதவிகிதம் திருநங்கைகள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாகவும். 30 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சுயவேலைவாய்ப்பில் ஈடுபாடுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குறைகளுக்கு காரணம் திருநங்கைகளுக்கான போதிய படிப்பறிவு குறைவு என தெரிவித்துள்ள கேரள அரசு இனி பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.