Skip to main content

செல்போன் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல்; பாஜக மீது குற்றச்சாட்டு...

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

bjp

 

மஹாராஷ்டிராவில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசு அறிவித்திருந்தது. மகாராஷ்ட்ரா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக சமீபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் செல்போன்கள் வாங்கப்பட்டன. அப்படி செல்போன்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே நிருபர்களிடம் பேசும்போது, "அரசின் அறிக்கைபடி செல்போன்களின் விலை தலா ரூ. 8 ஆயிரத்து 877 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்கள் வாங்கிய செல்போனின் சந்தைமதிப்பு வெறும் ரூ. 6 ஆயிரம் தான் என தெரியவந்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 106 கோடியே 82 லட்சம் ஒதுக்கப்பட்டது. ரூ.8 ஆயிரத்து 877-க்கு இதைவிட சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் இருக்கும்போது இந்த போன்கள் ஏன் வாங்கப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்காக வாங்கப்பட்ட செல்போன்கள் தற்போது சந்தையில் விற்பனையிலேயே  இல்லை. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தவேண்டும்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்