Skip to main content

விவசாயிகள் போராட்டத்தால் பிரதமர் மோடி வேதனை - ராஜ்நாத் சிங்!

Published on 30/12/2020 | Edited on 31/12/2020
rajnath singh

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் 35வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 6 ஆம் காட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளை நக்சல்கள் என்றும் காலிஸ்தானி என்றும் குற்றம் சாட்டக்கூடாது என்றும், விவசாயிகள் போராட்டத்தால் பிரதமர் மோடி வேதனைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து ராஜ்நாத் சிங், "போராடும் விவசாயிகள் நக்சல்கள், காலிஸ்தானிகள் என யாரும் குற்றம் சுமத்த கூடாது. விவசாயிகள் மீது நமது ஆழமான மரியாதையை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் நமக்கு உணவு அளிப்பவர்கள். விவசாயிகள் மீது உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறோமா என்ற கேள்விக்கே இடமில்லை. நமது விவசாயிகள் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் நான் மட்டும் வேதனைப்படவில்லை, பிரதமர் நரேந்திர மோடியும் வேதனையடைகிறார். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று அரசு திரும்ப திரும்ப கூறிவருகிறது. ஜனநாயகத்தில் தலைவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் என கூறியுள்ளார்.

 

மேலும் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசியுள்ள ராஜ்நாத் சிங், இந்தியா எல்லையில் படைகளை குறைக்கப்போவதில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், இந்தியா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை எந்த வெற்றியும் எட்டப்படவில்லை. இராணுவ மட்டத்தில் அடுத்த கட்ட  பேச்சுவார்த்தைகள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும். அதுவரை தற்போதைய நிலையே தொடரும். இந்தியா எல்லையில் படைகளை குறைக்காது. பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவு வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

 

 

சார்ந்த செய்திகள்