Skip to main content

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry narayanasamy cabinet resign

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அதை ஏற்காததால், அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமன எம்.எல்.ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்