Skip to main content

சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த ரவுடி கூலிங் கிளாஸ், ஷூ அணிந்து கலக்கலாக வந்ததால் பரபரப்பு! 

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன். இவர் மீது காலாப்பட்டு சந்திரசேகர் கொலை, முத்தியால்பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சிறையில் இருந்த சோழனை புதுச்சேரி போலீசார்    நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். 

puducherry lawspet chozhan court police

அப்போது சோழன் கூலிங் கிளாஸ் கண்ணாடி மற்றும் ஷூ அணிந்து கூட்டாளிகளுடன் ஸ்டைலாக நடந்து வந்தார். அப்போது அவர் தன்னை பார்க்க வந்த ஆதரவாளர்களை பார்த்து கும்பிட்டவாறும், ஸ்டைலாக கை அசைத்த வாரும் நடந்து சென்றுள்ளார். இதனை அவரது ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து ரஜினி நடித்துள்ள `தர்பார்’படத்தின் பாடலை மிக்ஸிங் செய்து, ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறைக்குள் நடத்திய அதிரடி சோதனையில் 11 செல்போன்களை கைதிகளின் அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றித்திரிந்த சிறுவன்; பெற்றோரிடம் ஒப்படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
cpm rescued boy who was wandering in Chidambaram and handed him over to his parents

புதுச்சேரி மாநிலம் மரப்பாலம் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்த முனுசாமி தீபா தம்பதியரின் மகன் கணேசன் (10 ) இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரை அவரது பெற்றோர்கள் கண்டித்ததால் சிறுவனுக்கு உறவினர்கள் அளித்த ரூ 500 கையில் இருந்ததால் பெற்றோர்கள் மீது உள்ள கோபத்தில் அதை எடுத்துக் கொண்டு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த பேருந்தில் ஏறி சிதம்பரத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் திங்கள்் கிழமை இரவு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.  இதனை கண்காணித்த அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்குழு உறுப்பினரான சின்னையனிடம் ஒப்படைத்தனர்.  சிறுவனிடம் அவர் பேச்சு கொடுத்து அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளார்.

பின்னர் இதனிடையே அவரது தாயின் செல்போன் எண்ணை அந்த சிறுவன் கூறியதால் அவரது தாயருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தார் புதுச்சேரி காவல் நிலையத்தில் இது குறித்து ஏற்கனவே புகார் செய்துள்ளனர். மகன் சிதம்பரத்தில் உள்ளான் என்ற தகவல் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு உடனடியாக சிதம்பரத்திற்கு திங்கள் கிழமை இரவு வந்தனர்.

இதனிடையே சிறுவனை மீட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினர் சின்னையன் சிறுவனுக்கு அவரது வீட்டில் உணவு வழங்கி கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து  அவரது  பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி.  ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா,  நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கொடநாடு வழக்கு; சிபிசிஐடி போலீசில் 4 பேர் ஆஜர்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
The Kodanadu case; 4 people appeared in the CBCID police

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதாவது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தலைமையில் நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதே சமயம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணர் குழு அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்கு அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும் போதெல்லாம் அவருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள இந்த நான்கு பேரும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (30.04.2024) நேரில் ஆஜராகி உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.