Skip to main content

மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கூட்டம் - திட்டம் வகுக்கும் பிரியங்கா காந்தி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

PRIYANKA GANDHI VADRA

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் கூட்டம் நடத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டுவருகிறார்.

 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்டித்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தை நடத்துவது குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

மேலும், இந்தக் கூட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்த காங்கிரஸ் அனுமதி கேட்டுள்ளது. ஒருவேளை மத்திய அரசு அனுமதி மறுத்தால் துவாரகா மைதானத்தில் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்