Skip to main content

ஓட்டுநர் உரிமை இல்லாவிட்டால் மட்டுமல்ல... இதை வைத்திருந்தால் கூட 5000 அபராதம்..!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019


ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, இன்சூரன்ஸ் எடுக்காமல் இருப்பது, சாலை விதிகளை மீறுதல், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போன்றவைகளுக்கு பலமடங்கு அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகை சில சமயம் வாகனத்தின் மதிப்பைவிட அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். நேற்றும் மட்டும் 40 ஆயிரம் மேல் இருவருக்கு போக்குவரத்து காவலர்கள் தலைநகர் டெல்லியில் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் வாகனங்களில் சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வாகனங்களின் நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் ஒட்டி இருந்தால் அதற்கும் 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சாதி, மதம், அரசியல் சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் பகிர்ந்து வருகின்றனர்.
 

bvn



ஆனால் அதே நேரத்தில் பெயர், பதவி, படிப்பு, போன்ற ஸ்டிக்கர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் ராஜஸ்தான் காவல்துறை அறிவித்துள்ளது. ஸ்டிக்கர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கானவும், சாதி, மத, அரசியல் ஸ்டிக்கர்கள் வாகன ஓட்டியின் பாதிகாப்பைக் கேள்விக்குறி ஆக்குகிறது என்பதாலும் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுக்கு கூட ரூ.5000 அபராதமா? என வாகன ஓட்டிகள் புலம்பினாலும் காவல்துறையினர்களின் இந்த நடவடிக்கை சரியே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்