Published on 13/10/2018 | Edited on 13/10/2018
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சி.எஸ்.ஆர் திட்டத்தில் துணைநிலை ஆளுநர் ரூபாய் 85 லட்சம் வசூல் செய்ததாகவும் ஆனால் அப்படி வசூல் செய்த தொகையை சி.எஸ்.ஆர் கமிட்டிக்கு அவர் அனுப்பவில்லை என்றும் ஆளுநர் மாளிகையை காட்டி பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார் கிரண்பேடி என அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்துள்ளார் நாராயணசாமி.