Skip to main content

மும்பை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து!! 

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
sivaji


டெல்லி விமான நிலையத்தை அடுத்து மிகவும் பிஸியாக இருக்கும் விமான் நிலையம் என்றால் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்தான். கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது மும்பை விமான நிலையத்தின் சாலைகள் குண்டுகுழியுமாக மாறியது. இதனை அடுத்து இந்த சாலையையும், விமான நிலையத்தையும் சீர் செய்யவும், பராமறிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விமான நிலையம் தெரிவித்திருந்தது. இதற்காக அக்டோபர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஓடுபாதை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை பராமறிப்பு பணி மற்றும் பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.
 

இந்த பணிகளால் பிரதான ஒடுபாதை மற்றும் இரண்டாம் கட்ட பாதை மூடப்படுகிறது. இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. பல விமானங்களின் காலநேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த அனைத்து தகவல்களும் பயணியர்களுக்கு குறிப்பிட்ட விமான நிறுவனங்களின் மூலம் அறிவிக்கப்பட்டுவிட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு மும்பை விமான நிலையத்திற்கு ஆயிரம் விமானங்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்