Skip to main content

கேப்டன் வருண் சிங்கிற்கு சிலை; குடும்பத்தினருடன் ஆலோசனை - ம.பி முதல்வர் அறிவிப்பு!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

CAPTAIN VARUN SINGH

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில் வருண் சிங்கின் உடல் இன்று மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்தநிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வருண் சிங்கின் உடலுக்கு மாநில அரசின் மரியாதையுடனும், இராணுவ மரியாதையுடனும் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் வருண் சிங்கின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ள சிவராஜ் சிங் சவுகான், வருண் சிங்கின் குடும்பத்தினருடன் ஆலோசித்து, அவருக்கு சிலை வைப்பது குறித்தும், அவரது பெயரை அரசு நிறுவனத்திற்கு சூட்டுவது குறித்தும் முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Shivraj Singh Chauhan resigns

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேலை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

Next Story

“ராகுல் காந்திக்கு ஐந்து வயது மனநிலை...” - ம.பி. முதல்வர்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sivaraj singh chowhan karnataka election talks about rahul gandhi

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.04.2023) மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கொடி என்ற இடத்தில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்திக்கு 50 வயதாகிறது. ஆனால் அவரது மனநிலை 5 வயதை போன்று உள்ளது. நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்த போது பிரதமர் மோடியை குற்றம் சாட்டினார். அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர்  வாக்குறுதிகளை அளிக்கும் அளவிற்கு திறமையானவரா" என கேள்வி எழுப்பி உள்ளார்.