Skip to main content

அடிக்கடி நடக்கும் பிரளயத்தால் தள்ளிப்போகும் திருமணம்... ஒரு காதல் ஜோடியின் கவலை

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

கேரளா மாநிலம் கோழிக்கோடு இாிஞ்சிபாலம் பகுதியை சோ்ந்த காதலா்கள் பிரேமன் (27) சாந்த்ரா (25) வேறு வேறு சமுதாயத்தை சோ்ந்த இருவரும் சிறுவயதில் நண்பா்களாக பழகி பின்னா் காதலரனாா்கள். ஆனால் இவா்களுடைய காதலை இரு வீட்டாா்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் பெற்றோா்கள் சம்மதத்துக்காக 7 ஆண்டுகளாக போராடி வந்தனா். அந்த போராட்டத்தின் பலனாக ஒரு கட்டத்தில் இரு வீட்டாரும் அவா்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சொந்த பந்தங்களே அசந்து போகும் அளவுக்கு இவா்களின் திருமணத்தை நடத்த பெற்றோா்கள் முடிவு செய்தியிருந்தனா்.

 

 Marriage that is pushed by the frequent deluge ... is the concern of a romantic couple


இதற்காக 2018 மே மாதம் திருமணத்துக்கு முடிவு செய்து அழைப்பிதழும் அடித்து உறவினா்களும் நண்பா்களும் கொடுத்தனா். அந்த நேரத்தில் கேரளாவை புரட்டி எடுத்தது நிபா எனும் வைரஸ் நோய். இதனால் திருமணத்தை நிறுத்தி விட்டு 2019-ல் ஓணத்தில் நடத்த முடிவு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினா் ஈடுபட்டனா். இந்தநிலையில் தான் அப்போது பெய்த கன மழையால் கேரளா முமுவதும் வெள்ளத்தில் மிதந்தது. இதிலேயும் அவா்களின் திருமணம் தள்ளி போனது.

அடுத்ததாக 2020 மாா்ச் 22-ல் திருமணம் நடத்த நாள் குறித்து அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடத்தி வந்தனா். திருமணத்தன்று 2000 போ் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் நடந்து வந்தன. பெற்றோா்கள் சம்மதத்துடன் நடக்க இருக்கும் காதல் திருமணம் இரண்டு முறை இயற்கையின் சீற்றத்தால் தள்ளி போனதால் மூன்றாவது முறை எப்படியும் நடந்து தீரும் என்ற கனவில் மிதந்த அந்த காதலா்களின் சந்தோஷத்தை கலைக்கும் விதமாக வந்து விழுந்தது கரோனா வைரஸ்.

இந்தியாவில் அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமான கேரளாவில் மக்கள் ஒடி ஒழித்து கொண்டியிருக்கிறாா்கள். இந்த சூழலில் தான் பிரேமன்-சாந்த்ரா காதலா்களின் திருமணம் இப்போதும் கனவாகி போய் விட்டது. அது குறித்து அந்த காதலா்கள் கூறும் போது.... கரோனா தாக்குதலில் இருந்து மக்கள் காப்பாற்ற பட்டாலே போதும் இப்போது எங்களுக்கு அதுதான் முக்கியமாக உள்ளது. ஏதோ நல்லதுக்கு வேண்டி தான் எங்கள் திருமணம் தள்ளி போகிறது என்று தான் நினைக்கிறோம். அடுத்து செப்டம்பா் மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.