Published on 10/03/2020 | Edited on 10/03/2020
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். இன்று (10/03/2020) காலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கமல்நாத், "கவலைப்பட ஒன்றுமில்லை; நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். எங்களின் அரசு முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும்." என்றார்.