Skip to main content

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 'வீடு' கட்டும் திட்டம்! - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

 

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், வீட்டுவசதி வாரியத்தின் கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 

சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோவில் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி மற்றும் விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, தமிழகம், ஆந்திரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

 

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 116.27 கோடி மதிப்பில் 1,152 வீடுகள் கட்டப்பட உள்ளன. 413 சதுர அடியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரைத் தாங்கும் வகையிலும் வீடுகள் கட்டப்படுகின்றன. பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடன் வீடுகள் கட்டப்படுகின்றன. புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டப்படும். வீடுகட்டும் பணிகள் 12 மாதத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவன் வடிவிலான சர்வதேச கிரிக்கெட் மைதானம்!; அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

rime Minister Modi is the foundation stone by International cricket ground in the shape of Shiva!;

 

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் இந்த தொகுதியின் எம்.பி.யாக 2வது முறையாக இருக்கிறார். இந்த நிலையில், வாரணாசியில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை உத்தர பிரதேச அரசு மேற்கொண்டு வந்தது. 

 

இந்த நிலையில், தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து, பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன்படி, வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

 

இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு, ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், இந்த மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானத்தில் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது.  

 

கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகள், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக அதன் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் பி.சி.சி.ஐ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். இதையடுத்து அவர்கள், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்றுள்ளனர். 

 

 

Next Story

அறக்கட்டளை ஆரம்பித்த ரிஷப் ஷெட்டி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Rishabh Shetty started the foundation

 

கடந்த ஆண்டு வெளியான 'காந்தாரா' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தை அவர் இயக்கி நடித்திருந்த நிலையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். 

 

கடந்த 7 ஆம் தேதி தனது 40வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார் ரிஷப் ஷெட்டி. அந்த விழாவில் அவரது மனைவி பிரகதி, ‘ரிஷப் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ இந்த அறக்கட்டளை உறுதுணையாக இருக்கும் என அறிவித்தார்.

 

பின்பு ரிஷப் ஷெட்டி, சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததற்கு நன்றி எனத் தெரிவித்தார்.